தந்தை தலையில் வெட்டிக் கொலை... உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன்... பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர்கள்...

1 hour ago 15

Last Updated:Feb 26, 2026 9:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை கொலை செய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், உடலின் அருகிலேயே படுத்து உறங்கி இருக்கிறார் மனநிலை பாதிக்கப்பட்ட மகன். விசித்திரமான இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?

News18
News18

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மகன் அரங்கேற்றிய கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?

உயிரிழந்து கிடக்கும் தாயின் உடல் அருகிலேயே செய்வதறியாது படுத்துக் கிடக்கும் மகனின் மனநிலை குறித்த காட்சிகள் 'ராம்' திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரங்கேறி இருக்கிறது. இங்கே தந்தையை கொலை செய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், உடலின் அருகிலேயே படுத்து உறங்கி இருக்கிறார் மனநிலை பாதிக்கப்பட்ட மகன். விசித்திரமான இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை ஐய்யாசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் 78 வயதான லோகநாதன். இவருக்கு திருமணமாகி ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதன் பிறகு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தவர், மகன் ஹரிஷ்குமாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

திருமண வயதைக் கடந்து 35 வயது ஆன நிலையில் ஹரிஷ்குமாருக்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது. அவர் பேச்சுலராகவே வாழ்ந்து வந்துள்ளார். காரணம் ஹரிஷ் குமாருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சற்று மனநல பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தந்தை மற்றும் மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு மீண்டும் தந்தையிடம் மகன் ஹரிஷ் கடுமையான தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தந்தை மீது பாசம் இருந்தபோதும், சண்டை என வந்துவிட்டால் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றுவிடுவார் ஹரிஷ். சம்பவத்தன்று தந்தை மீது ஏற்பட்ட வெறுப்பால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்துவந்துள்ளார் ஹரிஷ்.

இதையும் படிங்க: பழங்கள் மீது எலி மருந்தை தடவிய பயங்கரம்... மக்கள் உயிருடன் விளையாடிய வியாபாரி...

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் தந்தை லோகநாதன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, தூக்கம் வராமல் மன உளைச்சலில் தவித்துவந்த மகன் ஹரிஷ் குமார், கிச்சனுக்கு சென்று நீண்ட கத்தி ஒன்றை எடுத்து வந்திருக்கிறார். படுத்து உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கத்தியால் தலையிலேயே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தந்தை லோகநாதன் உயிரிழந்தார்.

அதன் பிறகு மன நிம்மதியடைந்த மகன் ஹரிஷ் குமார் தந்தையின் உடல் அருகிலேயே அமர்ந்து அழுதிருக்கிறார். கோபம் ஒரு பக்கம் கட்டுக்கடங்காமல் அவரை உலுக்கியபோதும், மறுபக்கம் தந்தை மீதான பாசம் அவரை கண்ணீர்விட வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் அழுதபடி பக்கத்தில் அமர்ந்தே உறங்கிப் போனார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் உடலைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்த ஹரிஷ் குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

தந்தை தலையில் வெட்டிக் கொலை... உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன்... பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர்கள்...

Read Entire Article