Last Updated:May 12, 2026 10:12 PM IST
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 54 மீனவர்கள், 264 படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், ஆல்பர்ட் உட்பட ஆறு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அந்நாடு சிறையில் உள்ளதாகவும், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இப்பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
First Published :
May 12, 2026 10:12 PM IST
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
.png)








English (US) ·