தமிழ்நாடு முதலமைச்சரமாக அமர்த்தப்பட்ட விஜய் ... பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் கெடு

1 hour ago 18

Last Updated:May 09, 2026 8:54 PM IST

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் அமர்த்தப்படுவதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். ஆனாலும், ஆட்சி அமைக்க தவெகவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்வி அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. 
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். ஆனாலும், ஆட்சி அமைக்க தவெகவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்வி அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. 

தமிழ்நாடு முதலமைச்சராக  விஜய் அமர்த்தப்பட்டார். சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் கெடு விடுத்துள்ளார். நாளை விஜயின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

முன்னதாக, 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமனறப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றதால் தவெகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டது. 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. திமுகவுடனான தனது கூட்டணியையும் முறித்துக் கொண்டது.

இந்நிலையில், தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை  தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆதரவுக் கடிதத்தையும் வழங்கியுள்ளன. எனவே, தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. அதன்பிறகு, தலா இரண்டு உறுப்பினர்களை கொண்ட விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் தவெக-வுக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து, தவெகவின் பெரும்பான்மை பலம் 118 ஆக அதிகரித்தது.

இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய், புதிய ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரினார். தவெக-வின் 107 எம்.எல்.ஏ-க்களுடன், கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். தவெக தரப்பின் கோரிக்கையை ஏற்று, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் அமர்த்தப்படுவதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது. மேலும், தவெக தனது பெரும்பான்மை பலத்தை சட்டமன்ற பேரவையில் 13ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article