சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று (10.5.2026) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி யைத் தவிர்க்கவும், பா.ஜ.க.வின் மறைமுகத் தலையீட்டைத் தடுக்கவும் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஅய் (2), சிபிஎம் (2) மற்றும் அய்யூஎம்எல் (2) ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதனை அடுத்து விசிக மற்றும் அய்யூஎம்எல் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். பெரும்பான்மையை உறுதி செய்ததையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்யு டன் சேர்த்து மொத்தம் 10 பேர் கொண்ட சிறிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. அமைச்சர்களாகப் பதவியேற்ற வர்கள்:
என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா.
ஆளுநர் கெடு
பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, வரும் மே 13 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளார்.
.png)
4 hours ago
9







English (US) ·