Last Updated:Feb 08, 2026 12:27 PM IST
தேர்தல் ஆணையம் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும், 34.75 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்தது, புதிய அடையாள அட்டைகள் விரைவு தபாலில் அனுப்பப்படும்.

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வரும் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டைகள் விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பங்கள் அளிக்க வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைப் பயன்படுத்தி, இதுவரை சுமார் 34 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது வரை 90 சதவீத விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாகவும் தேர்ல் ஆணையம் கூறியுள்ளது.
இந்தப் பணிகள், செவ்வாய்க்கிழமையுடன் முழுமையாக நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களிலும் இணையதளத்திலும் பார்வையிடலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிய வாக்காளர்களுக்கு அடையாள எண்கள் ஒதுக்கப்பட்டு, அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாகவும், அவை வரும் 17-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கே விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
First Published :
Feb 08, 2026 12:27 PM IST
.png)







English (US) ·