
சென்னை: மே 11-
தமிழகத்தின் உயரமான பாலம் வரப்போகிறது.. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நிலவி வந்த நீண்ட கால விபத்து அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.. தமிழகத்தின் மிக உயரமான பாலமாகக் கருதப்படும் இத்திட்டம், வனப்பகுதிகளையும் விபத்து மண்டலங்களையும் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.. 2028-க்குள் முடிக்கப்படவுள்ள இந்த நவீனப் பொறியியல் அதிசயம், “மரணக் கணவாய்” என்ற பெயரை மாற்றி விபத்தில்லா சாலையாக இப்பகுதியை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதி என்றாலே வாகன ஓட்டிகளின் மனதில் ஒருவித அச்சம் எழுவது வழக்கம்.
வளைவுகளும், செங்குத்தான சரிவுகளும் கொண்ட இந்தப் பாதையில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துகளும், 520-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் என்.எச். 44 சாலையில் இது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது.இந்த நீண்ட காலப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், தற்போது 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் மிக உயரமான புதிய மேம்பாலச் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
.png)
1 hour ago
9







English (US) ·