தள்ளிப்போகும் ‘ஜெயிலர்-2’ பட வெளியீடு

53 minutes ago 9

2b4c9832-0e85-4dae-8d63-ae88da3c6693

நெல்சன் (இடது), ரஜினி. - படம்: எம்என்9.நியூஸ்

'Jailer 2' film release postponed

The release of Rajinikanth's film 'Jailer' might be postponed from its planned August date to the first week of September. Director Nelson is currently filming additional important scenes, necessitating the delay. He has requested more time from the production team. The film also features Ramya Krishnan, Mirna, Shivraj Kumar, Mohanlal, S.J. Surya, Vidya Balan, Mithun Chakraborty, and Santhanam.

Generated by AI

ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தின் வெளியீடு தாமதம் ஆகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடத் தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், சில முக்கியமான காட்சிகளுடன் வேறு சில காட்சிகளை இணைக்க நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அக்குறிப்பிட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்.

இதனால், செப்டம்பர் முதல் வாரத்தில்தான் படம் வெளியீடு காணத் தயாராகுமாம். அதுவரை தமக்கு அவகாசம் அளிக்குமாறு தயாரிப்புத் தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நெல்சன்.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி, சந்தானம் ஆகியோரும் உள்ளனர்.

Read Entire Article