தவெக: ``நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவனல்ல.!" - முதல்வர் ஜோசப் விஜய் முதல் பேச்சு

5 hours ago 5

தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விஜய் முதல் உரை

Published:3 mins agoUpdated:3 mins ago

முதல்வர் ஜோசப் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய்

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மே 4-ம் தேதி முடிவுகள் வெளியானது.

இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதனால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சியின் உதவியை நாடியது தவெக.

இந்த அனைத்து கட்சிகளின் ஆதரவு நேற்று உடன் கிடைக்க, அந்தக் கட்சிகளின் தலைவர்கள் உடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய்

ஆட்சி அமைக்கவும் ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய். ஆளுநரும் விஜய்யின் கோரிக்கையை ஏற்றுகொண்டார்.

இதையடுத்து இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடந்து வருகிறது.

அதில் தவெக விஜய், 'ஜோசப் விஜய் எனும் நான்' என்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

அதுவும் கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் விஜய்.

உதவி இயக்குநரின் மகன் நான்

அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, ``எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வரவேண்டும் எனவிரும்பிய உதவி இயக்குநரின் மகன் நான்.

பசி, வறுமை என்பது எல்லாம் எனக்குத் தெரியும். நான் மன்னன் பரம்பரையில் இருந்து வந்தவனல்ல. நான் உங்கள், அண்ணன், தம்பி, மகன் போலதான் நான்.

முதல்வர் ஜோசப் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய்முதல்வர் ஜோசப் விஜய்

அதனால்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். என்னை அன்பாக ஏற்றிருக்கிறீர்கள். இந்த பயணத்தில் எனக்கு இருந்த கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும் அது உங்களுக்கும் இருந்தது. அதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடனே இருந்து, சி.ஜோசப் விஜய் எனும் நான் என்பதை உண்மையாக்கியிருக்கிறீர்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Entire Article