Last Updated:May 09, 2026 7:45 PM IST
எங்களால் தமிழ் நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி வந்து விட்டது என்ற நிலை வரக்கூடாது - தொல். திருமாவளவன்

திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு எனவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"எங்களால் தமிழ் நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி வந்து விட்டது என்ற நிலை வரக்கூடாது என்பதனால் இந்த முடிவை எடுத்துதுள்ளதாக தெரிவித்தார். குதிரை பேரத்திற்கு இடமளித்து விடக்கூடாது என்பதற்காகவும் விசிகவால் ஆட்சி அமையாமல் போனது என்ற அவப்பெயரைத் தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவைத் தொடரப் போவதாக தெரிவித்த அவர், "புதிய அரசை அமைப்பதாற்காக மட்டும் நிபந்தையற்ற ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், திமுக உடனான கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரம், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், " தவெக-வுக்கு விசிக ஆதரவு கடிதம் கொடுத்துள்ளது. விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 35 ஆண்டுகால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூகநீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தவெக ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவு வழங்கி உள்ளது. ஐயூஎம்எல் கட்சி நேற்று ஆதரவு வழங்க மறுத்த நிலையில் தற்போது ஆதரவு கடிதம் வழங்கி உள்ளது. இதன் மூலம் தவெக ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
தவெக-வுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ள நிலையில், புதிய ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு உள்ளதால் இந்த முறை ஆளுநர் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளையே தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக தவெக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)







English (US) ·