தாய்லாந்தில் செம்பனை எண்ணெய் கட்டுப்பாடு அறிமுகம்

1 hour ago 8

61ef9bb8-1f0f-4375-be62-7a862bf08de6

உலகின் மூன்றாவது பெரிய செம்பனை எண்ணெய் உற்பத்தி நாடு தாய்லாந்து. - படம்: பிக்சாபே

Palm oil control introduced in Thailand

Thailand's Ministry of Commerce is tightening controls on crude and bottled palm oil exports starting Tuesday, April 7th. This is due to rising global fuel prices and increased diesel demand linked to the Middle East conflict. The government aims to maintain energy reserves with these measures but assures it will not negatively impact farmers. Thailand, the world's third-largest palm oil producer, anticipates producing 21.87 million tonnes of palm oil and 3.94 million tonnes of crude palm oil this year.

Generated by AI

பேங்காக்: கச்சா செம்பனை எண்ணெய் (பாமாயில்) ஏற்றுமதியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் கடுமையாக்கப் போவதாக தாய்லாந்தின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட செம்பனை எண்ணெய்க்கான கட்டுப்பாடுகளும் அப்போது நடப்புக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்த பின்னர் டீசலுக்கான தேவை அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டுவருகிறது.

ஆயினும், எரிசக்திக் கையிருப்பைப் பராமரிப்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்களை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அமைச்சு கூறியது.

உலகின் மூன்றாவது பெரிய செம்பனை எண்ணெய் உற்பத்தி நாடான தாய்லாந்து இவ்வாண்டு 21.87 மில்லியன் டன் செம்பனை எண்ணெய்யையும் 3.94 மில்லியன் டன் கச்சா செம்பனை எண்ணெய்யையும் தயாரிக்க திட்டம் போட்டுச் செயல்பட்டு வருவதாக வேளாண் பொருளியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Read Entire Article