திராவிட விளையாட்டு நீதி துறையை பதம் பார்த்து விட்டது..! விளக்கமளிக்க நீதிபதி செந்தில் குமாருக்கு உத்தரவு..!

18 hours ago 13

சிபிஐ விசாரணை கோரிய மனுத்தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், உண்மையாக இருக்கும் பட்சத்தில் கருத்தில் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது.

14

Image Credit :

Asianet News

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்ட விதத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. சென்னை பெஞ்ச் முன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, அரசியல் பேரணிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கக் கோரியதில் எஸ்ஐடி விசாரணை உத்டரவிட்டது ஏன்? அரசியல் பேரணிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை கோரிய ரிட் மனுவை குற்றவியல் ரிட் மனுவாகப் பதிவு செய்ததற்காக உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் விளக்கம் கேட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கரூர் மதுரை பெஞ்சின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. சென்னை பெஞ்ச் எப்படி எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையில் உள்ள டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை பரிசீலித்து வந்தது. எனவே, சென்னையில் உள்ள தனி நீதிபதி எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

24

விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மீது சென்னையில் உள்ள தனி நீதிபதி பாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சென்னை பெஞ்சின் அணுகுமுறை "உணர்திறன் மற்றும் நேர்மையின்மை" என்பதைக் குறிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, அரசியல் கட்சிகளுக்கு அரசியல் பேரணிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை கோரிய மனுவை ஒரு குற்றவியல் ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர் கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு எஸ்ஐடி அமைப்பதன் மூலம் தனது வரம்பை மீறியுள்ளது. கரூர் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மதுரையில் உள்ள டிவிஷன் பெஞ்ச் அதே நாளில், அதாவது அக்டோபர் 3 அன்று சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை ஏற்க மறுத்ததால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

34

நீதிபதி மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவில், "உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டை நாங்கள் தீவிரமாகக் கவனித்துள்ளோம். மனுக்கள், கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு, தனி நீதிபதி தானாக முன்வந்து ரிட் மனுவின் நோக்கத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். எஸ்.ஐ.டி அரசியலமைப்பிற்கான மனு , கோரிக்கைகள் இல்லாதபோதும் அசாதாரண சூழ்நிலைகள், அசாதாரண நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். தவெக உறுப்பினர்கள் மனுதாரர்களாக சேர்க்கப்படாத ரிட் மனுவில் கரூர் நெரிசல் குறித்து கற்றறிந்த தனி நீதிபதி சில அவதானிப்புகளை செய்தார். அவர்களுடன் தேவையான மனுதாரார்களாக சேர்க்க ஒரு வாய்ப்பை வழங்காமல், ஆட்சேபனை செய்யப்பட்ட உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து பதிவு செய்தது. விசாரணையின் முன்னேற்றம், சுதந்திரம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி மாநில அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்ட்டுள்ளது. சென்னை பெஞ்சின் உத்தரவு எந்தெந்த விஷயங்களை பரிசீலித்தது என்பதை விளக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. தனி நீதிபதி எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்? நீதிமன்றத்தால் என்னென்ன ஆவணங்கள் ஆராயப்பட்டன என்பது குறித்து தீர்ப்பு முற்றிலும் மௌனமாக உள்ளது.

இந்த உத்தரவு முக்கியமாக கூடுதல் அட்வகேட் ஜெனரலின் செயல்பாடுகளையும். ரிட் மனுக்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதைக் கவனிப்பது பொருத்தமற்றது அல்ல. அந்த உத்தரவை கவனத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவை, சென்னையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் கற்றறிந்த தனி நீதிபதி, அரசியல் பேரணிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கம் தொடர்பான விஷயத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் கவனிக்கிறோம். அரசியல் பேரணிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கான கோரிக்கைகள், பேரணிகளுக்கான வழிகாட்டுதல்கள் பொதுமக்களை பெருமளவில் பாதித்து, ஆராயப்பட்டு வரும் நிலையில், எங்கள் பார்வையில், அத்தகைய மனுவை ஒரு டிவிஷன் பெஞ்ச் பொது நல வழக்காகப் பதிவு செய்து, சரியான ஆர்வத்துடன் கையாள வேண்டும். ஒற்றை பெஞ்சால் கையாளப்படக்கூடாது.

44

Image Credit :

Asianet News

ரிட் மனுக்களில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரதான இருக்கையின் தனி நீதிபதி, வழக்கு விசாரணைகளுக்கு அப்பால் வழக்கின் நோக்கத்தை நீட்டித்தார். இரண்டு வழக்குகளிலும், கற்றறிந்த தனி நீதிபதி விசாரித்துள்ளார். இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்து சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. மேலும் சிபிஐ விசாரணை கோரியும், சிறப்பு விசாரணை இயக்குநரகத்தை அமைக்கக் கோரியும் ரிட் மனு அதே நாளில் டிவிஷன் கிளையால் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இது எப்படி கிரிமினல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உண்மையில் அவர்களால் தாக்கல் செய்யவில்லை என்று வக்கீல்கள் முறையிட்டனர். அதற்கு நீதிபதி மகேஸ்வரி, அது உண்மை எனில் நாங்கள் அதை கவனத்தில் கொள்வோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பாடுகள் பற்றி தீவிரமாக கவனித்தோம். சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் முடிவை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.

இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்க கோரிய மனு, எவ்வாறு கிரிமினல் வழக்கின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும். இதனால் தான், நாங்கள் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரும், சென்னை உயர்நீதிமன்றமும் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கரூர் விவகாரம் தொடர்பான மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய மனுத்தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், உண்மையாக இருக்கும் பட்சத்தில் கருத்தில் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமிழக காவல்துறைக்கும், திமுக அரசுக்கும் பெருத்த அவமானம் எனக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்திற்கும் இவர்களின் செயலால் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறை வரை திமுக அரசின் கரங்கள் நீண்டுள்ளன. நீதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அப்பட்டமாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

Read Entire Article