திருச்சி சமயபுரம் கோவில் ராஜகோபுரம் முன்பாக உள்ள மண்டபம் இடிக்கப்படு: ஆட்சியர் எச்சரிக்கை!!

11 hours ago 8

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் இராஜகோபுரம் முன்புறம் கிழக்கு பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள RCC மண்டபத்தினை எதிர்வரும் 13.05.2026 அன்று வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள்

முன்னிலையில் பாதுகாப்பான முறையில் இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கப்பட உள்ளது. சுமார் 15 நாட்கள் இப்பணி நடைபெறும்.
அப்பொழுது அருகில் குடியிருப்போர் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும், பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி இடிக்கும் கட்டிடத்தின் அருகில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

Read Entire Article