திருச்சியில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்

17 hours ago 20

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர்குட்டப்பட்டு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் அமைப்பு மற்றும் தனியார் கல்லூரி இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார், முகாமில் இந்துஸ்தான், டாட்டா மோட்டார்ஸ், முத்தூட் நிதி நிறுவனம், எம்ஆர்எப், எல் ஐ சி நிறுவனம் எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது.

காலை முதல் முகாமில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பதிவு செய்து நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணி பெற்றவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், ஆகியோர் பங்கேற்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

Read Entire Article