Last Updated:Jun 05, 2026 10:10 PM IST
திருச்செந்தூர் முருகன் கோயில் லஞ்ச விவகாரத்துக்கு பின் புகார்களை ஆய்வு செய்ய ஆறு பேர் குழு அமைப்பு.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கடந்த மே மாதம் 29ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விரைவாக சாமி தரிசனம் செய்ய ஒருவருக்கு ரூ. 1000 என அமைச்சர் உட்பட அவருடன் வந்தவர்கள் மூவருக்கு சேர்த்து ரூ. 4000 லஞ்சமாக வாங்கினார் அர்ச்சகர் ஐயப்பன்.
இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அர்ச்சகர் ஐயப்பனுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை திருச்செந்தூர் கோயில் அர்ச்சனை செய்ய தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. இதேபோல், கோயிலில் காவல் பணியில் ஈடுபட்டுவந்த தனியார் நிறுவன ஒப்பந்த காவலர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டும், முடியிறக்கும் பணியாளர்கள் இருவரின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க அறநிலையத்துறை சார்பில் ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு 100 ரூபாய் டிக்கெட், அன்னதானம், தங்குமிடம் முன்பதிவு போன்ற கோவிலின் பல்வேறு சேவைகளில் இருக்கும் புகார்களை விசாரித்து அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First Published :
Jun 05, 2026 10:10 PM IST
.png)






.png/jcr:content/renditions/cq5dam.web.1280.1280.png)

English (US) ·