Last Updated:October 13, 2025 7:22 AM IST
Bus Fair | தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், பலரும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், பலரும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து டிக்கெட்களின் அதிரடி கட்டண உயர்வால், தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக அரசு சார்பில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க விழுப்புரம், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட அனைத்து கோட்டங்களின் சார்பிலும் டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும், ஆம்னி பேருந்துகள் விலையை குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.