தொண்டூழியர்களின் திறனை மதிப்பிடும் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம்

1 hour ago 10

ab196b39-3dd6-40fe-abf7-432d511de5c5

செயற்கை நுண்ணறிவு மூலம் தொண்டூழியர்களின் பரிவு போன்ற அம்சங்களைச் சோதிக்க முடிகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள ஒரு சமூகச் சேவை அமைப்பின் தொண்டூழியர்களைச் செயற்கை நுண்ணறிவும் மெய்நிகர் தொழில்நுட்பமும் இப்போது மதிப்பிடுகின்றன.

‘லவிங் ஹார்ட்’ என்ற அமைப்பின் வழக்கமான மதிப்பீட்டு நடைமுறைகளை அதிநவீன தொழில்நுட்பம் மாற்றியமைத்துள்ளது.

அமைப்பில் உள்ள தொண்டூழியர்கள், மூத்தோரின் வீட்டில் உள்ள அபாயங்களை எந்தளவு துரிதமாகக் கண்டுபிடிக்கின்றனர், எந்தளவு பரிவு காட்டுகின்றனர், மூத்தோருடன் எவ்வாறு உரையாடுகின்றனர், முடிவெடுக்கின்றனர் ஆகியவற்றை இன்னும் திறம்பட செயற்கை நுண்ணறிவும் மெய்நிகர் தொழில்நுட்பமும் மதிப்பிடுகின்றன.

இத்தகைய மதிப்பீடுகள் வேலை செய்யும் நேரங்களில் மதிப்பிடப்படுவது வழக்கம். தொண்டூழியர்களைத் தனித்தனியாக மதிப்பிடவேண்டும். அத்துடன், மூத்தோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தொண்டூழியர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை நேரில் பார்ப்பது அவசியம்.

புதிய செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் அந்தச் சுமையை நீக்கியுள்ளதாகக் கூறினார் லவிங் ஹார்ட் அமைப்பின் தாதியும் சமூகச் சுகாதாரப் பிரிவின் தலைவருமான திருவாட்டி இலெயின் ஹோ.

புதிய மதிப்பீட்டுச் சோதனையைச் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூக சேவை அமைப்பு உருவாக்கியுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அந்தச் சோதனை, மூத்தோரைப் பராமரிப்பது தொடர்பிலான எதார்த்த சூழல்களை முன்வைக்கிறது.

மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 பேர் அந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் திறனைச் சோதிக்க முடியுமா? என்ற ஐயம் இருந்ததாகத் திருவாட்டி ஹோ கூறினார். ஆனால் அது அவரின் எதிர்பார்ப்பை மிஞ்சிவிட்டது.

“செயற்கை நுண்ணறிவால் பரிவை எப்படி மதிப்பிட முடியும்? வழக்கமாக அதைத் தெரிந்துகொள்ள தொண்டூழியர்களைக் கவனிப்போம். மூத்தோரை அவர்கள் எப்படிப் பார்த்துக்கொள்கின்றனர் என்பதை வைத்து பரிவை மதிப்பிடுவோம். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலம் நடத்தப்பட்ட சோதனை என்னை வெகுவாகக் கவர்ந்தது,” என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு சோதனை முடிவுகள் மூலம் தொண்டூழியர்களுக்கு இருக்கும் திறன்களை அடையாளம் காண முடிவதாகவும் திருவாட்டி ஹோ கூறினார்.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மத்திய திறன் மதிப்பீட்டு, அங்கீகாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த இணையச் சோதனை வடிவமைக்கப்பட்டது.

நிபுணத்துவத் திறன்களைச் சோதித்த தேசிய தரநிலையை நிர்ணயிக்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து அந்தத் திட்டம் அமைக்கப்பட்டது.

Read Entire Article