தோற்றாலும் தலைவன் வெல்ல வேண்டும்!! முட்டிப்போட்டு மலை ஏறிய தவெக நிர்வாகி...

1 hour ago 9

Last Updated:May 10, 2026 6:56 PM IST

விஜய் முதல்வராக வேண்டும் என மயிலம் முருகன் கோவிலில் 365 படிக்கட்டுகளை முட்டிப்போட்டு ஏறிய தவெக மாவட்ட செயலாளரின் பக்திப் பயணம் வைரலாகி வருகிறது.

+

News18

News18

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, தேர்தலில் தவெக அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் முதலமைச்சர் பதவியேற்பதில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் நீடித்து வந்தன. இதனால் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் தங்களது தலைவன் முதலமைச்சராக வேண்டும் என கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வந்தனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளருமான வடிவேல், புகழ்பெற்ற மயிலம் முருகன் கோவிலில்  நேர்த்திக்கடன் செலுத்தினார். மலையின் உச்சியில் உள்ள முருகன் சன்னதியை அடைய இருக்கும் 365 படிக்கட்டுகளையும் முட்டிப்போட்டு, மண்டியிட்டு ஏறிச் சென்று, “விஜய் முதலமைச்சராக வேண்டும்” என உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், வடிவேல் மேற்கொண்ட அந்த நேர்த்திக்கடன் மற்றும் பக்திப் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், தனது தலைவரின் வெற்றிக்காக வடிவேல் வெளிப்படுத்திய இந்த அர்ப்பணிப்பு, தவெக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்சியை ஏற்பத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read Entire Article