Last Updated:Dec 21, 2025 10:52 AM IST
Actress | பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் நடித்த பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் எங்கே நடந்தது?

பாகுபலியில் "மனோஹரி" பாடலுக்கு பிரபாஸ் உடன் ஆடியவர் தான் கனேடிய நடனக் கலைஞரும் நடிகையுமான நோரா ஃபதேஹி. சல்மான் கான், வருண் தவான் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
நோரா ஃபதேஹி பிப்ரவரி 6, 1992 அன்று கனடாவின் மாண்ட்ரீலில் பிறந்தார். பெற்றோர் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள். ஆனால் தந்தையின் பூர்வீகம் இந்தியாதான். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால்தான் இந்தியா வந்தார். அதற்கு முன் அவர் ஒரு நல்ல நடனக் கலைஞராக அறியப்பட்டார்.
'ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்' என்ற ஹிந்திப் படத்தின் மூலம் நோரா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 'பாகுபலி: தி பிகினிங்' படத்தில் மனோஹரி, 'டெம்பர்' படத்தில் இட்டகே ரெச்சிபோடம், கிக் 2 இல் கிருகு கிக், ஷேர் படத்தில் நாபேரே பிங்கி, லோஃபர் படத்தில் நேப்பே தோச்சே போன்ற சிறப்புப் பாடல்களுக்கு நடனமாடினார்.
கத்ரீனா கைஃப், சல்மான் கான் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் 'பாரத்' படத்தில் நடித்தார் நோரா ஃபதேஹி. இப்படம் சுமார் ரூ.300 கோடி வசூல் செய்தது. வருண் தவானுடன் 'ஸ்ட்ரீட் டான்சர் 3டி' படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே எதிர்பாராத விபத்தில் சிக்கி நோரா ஃபதேஹி காயமடைந்திருக்கிறார். மும்பையில் நேற்று மதியம் நோரா ஃபதேஹி காரில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிரே மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி வந்த கார் டிரைவரால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் நோரா ஃபதேஹி கடுமையான பாதிப்புகளை சந்திக்க, அவரும் காயமடைந்தார். இதையடுத்து போலீஸ் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறிய காயங்கள் என்பதால் சில மணிநேரங்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோரா ஃபதேஹி அன்று இரவே இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எனினும் விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், “நண்பர்களே, நான் நலமாக இருக்கிறேன். நான் பெரிய கார் விபத்தில் சிக்கியிருந்தேன். குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவர் எனது கார் மீது மோதினார். நான் உயிருடன் இருக்கிறேன். சில சிறிய காயங்கள். தயவு செய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். மதியம் 3 மணிக்கு ஒருவர் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குகிறார் என்பதை நம்ப முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 100 ரூபாய் தாய்லாந்தில் எவ்வளவு தெரியுமா?
தாய்லாந்தில் ரூ.100 இந்திய மதிப்பு சுமார் 35.04 தாய் பாட். இது தினசரி மாறலாம்.
நகர மையங்களில் நாணய மாற்று மையங்களில் மாற்றுவது குறைந்த கட்டணமாகும்
பயணத்திற்கு முன் மாற்று விகிதங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து எடுத்துச் செல்லவும்
.png)




English (US) ·