நிலத்தடிக் குழாய் பழுதால் ஈசூன் குடியிருப்பில் வெள்ளம்: பியுபி விசாரணை

7 hours ago 9

Flood in Yishun residential area due to an underground pipe fault: PUB investigation

On Sunday, May 10, at 12:50 AM, an underground pipe burst in Yishun near Block 101 Yishun Avenue 5, causing flooding in the residential area and onto Sembawang Road. The Public Utilities Board (PUB) is investigating and conducting repair works. PUB confirmed no disruption to the water supply for homes or businesses. Arrangements were made with Nee Soon Town Council for the cleanup.

Generated by AI

ஞாயிற்றுக்கிழமை (மே 10) நள்ளிரவு கடந்து 12.50 மணியளவில் ஈசூனில் உள்ள குடியிருப்பில் நிலத்தடிக் குழாய் பழுதடைந்து நீர் பெருக்கெடுத்து அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) சம்பவத்தை விசாரிப்பதோடு, அதன் தொழில்நுட்பப் பணியாளர்கள் அங்கு சீரமைப்பு வேலைகளைச் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

ஈசூன் அவென்யு 5, புளோக் 101 என்ற முகவரியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் அருகே சம்பவம் நடந்தது.

செம்பவாங் ரோடு சந்திப்புக்கு அருகே அக்கட்டடம் உள்ளதால், வெள்ளம் அச்சாலையிலும் வழிந்தோடியதாகப் பியுபி அதேநாள் காலை 9.43 மணிக்கு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்குமான தண்ணீர் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று பியுபி உறுதி செய்தது.

நீ சூன் நகர மன்றத்துடன் இணைந்து அப்பகுதியை சுத்தம் செய்ய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கழகம் தெரிவித்தது.

Read Entire Article