Last Updated:Feb 07, 2026 8:56 PM IST
இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குழந்தை உடலை புதைத்துள்ளார்.

நெல்லையில் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்த போது குழந்தை இறந்தே பிறந்த நிலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நசீன் உசேன் கோவையில் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி முகமது அஸ்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மேலப்பாளையம் நகர் நல மையத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.
வெள்ளிக்கிழமை அவருக்கு பிரசவ தேதி என்ற சூழலில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நேரில் சென்று அவரை மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
இதற்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால், காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே அஸ்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத நசீன் உசேன், வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குழந்தை உடலை புதைத்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்தனர்.
அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்ததும், பின்னர் சிசுவின் உடலை புதைத்ததும் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நசீன் உசேனை காவல்துறையினர் கைது செய்தனர்.
.png)






English (US) ·