பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி.. மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.. உதயநிதி

7 hours ago 17

தமிழ்நாட்டில் பத்துத் தோல்விகளைக் கண்ட பழனிசாமியும், மொத்தத் தோல்வியைச் சந்தித்த மோடியும் என்னதான் கூட்டணி வைத்தாலும், தமிழ்நாட்டிற்குள் உங்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துணைமுதல்வர் உதயநிதி பேச்சு.

2 Min read

Published : Feb 07 2026, 11:25 PM IST

14

சங்கிகளுக்கு நம் மீது எரிச்சல்

Image Credit : Asianet News

சங்கிகளுக்கு நம் மீது எரிச்சல்

விருதுநகரில் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க-விற்கும் நம்முடைய முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனால் சங்கிகளுக்கு நம் மீது எப்போதும் ஓர் எரிச்சல், ஒரு கோபம்.

இதுநாள் வரைக்கும் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காத திரு. நரேந்திர மோடி அவர்கள், இப்போது தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார். என்ன காரணம்? தேர்தல். தேர்தல் வந்தவுடனேயே அவருக்குத் தமிழ்நாடு நினைவிற்கு வந்துவிடும். இனிமேல் மோடியைப் பிடிக்க முடியாது, அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். திருக்குறள் சொல்வார், கடலுக்கடியில் சென்று தியானம் எல்லாம் செய்வார்.

24

ஒற்றை எஞ்சின்.., இரட்டை இலக்க வளர்ச்சி

Image Credit : x

ஒற்றை எஞ்சின்.., இரட்டை இலக்க வளர்ச்சி

சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். என்ன சொன்னார்? தமிழ்நாட்டிற்கு 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் வேண்டும் என்று சொன்னார். திரு. பிரதமர் மோடி அவர்களே, நாங்கள் திராவிட மாடல் என்கின்ற 'ஒற்றை எஞ்சினை' வைத்தே ஏற்கனவே இரட்டை இலக்க வளர்ச்சியை , அதாவது 11.19% வளர்ச்சியை எட்டிவிட்டோம். நீங்கள் சொல்கின்ற அந்த 'இரட்டை எஞ்சின்' டப்பா எஞ்சினை வைத்துக்கொண்டு பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்கள் இன்னும் 6 சதவீத வளர்ச்சியைக்கூடத் தொடவில்லை. தமிழ்நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியில் பாதியைக்கூட நீங்கள் நெருங்கவில்லை.

பொதுவாகத் தேர்தலை எல்லாரும் 'ஜனநாயகத் திருவிழா' என்று சொல்வார்கள். ஒரு திருவிழாவில் என்னவெல்லாம் இருக்கும்? வானவேடிக்கை நடக்கும், மக்கள் உற்சாகமாக இருப்பார்கள், எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ஓர் அணியாகத்தான் நம்முடைய தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, ஒரு மகிழ்ச்சியான அணியாக இன்று இருக்கிறது.

34

பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி

Image Credit : Asianet News

பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி

இவ்வளவு காலம் அ.தி.மு.க, பா.ஜ.க-வின் கிளையாக இருந்தது. இன்று அ.தி.மு.க, பா.ஜ.க-வின் இலையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பத்துத் தோல்விகளைக் கண்ட பழனிசாமியும், மொத்தத் தோல்வியைச் சந்தித்த மோடியும் என்னதான் கூட்டணி வைத்தாலும், தமிழ்நாட்டிற்குள் உங்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

பொதுவாகத் தேர்தலை எல்லாரும் 'ஜனநாயகத் திருவிழா' என்று சொல்வார்கள். ஒரு திருவிழாவில் என்னவெல்லாம் இருக்கும்? வானவேடிக்கை நடக்கும், மக்கள் உற்சாகமாக இருப்பார்கள், எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ஓர் அணியாகத்தான் நம்முடைய தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, ஒரு மகிழ்ச்சியான அணியாக இன்று இருக்கிறது.

44

தேர்தல் நேரத்தில் வரும் புதிய கடைகள்..

Image Credit : Asianet News

தேர்தல் நேரத்தில் வரும் புதிய கடைகள்..

அதேபோலத் திருவிழா நேரத்தில் புதிய புதிய கடைகள் போடுவார்கள். மக்களைக் கூப்பிட்டுப் பொய் விளம்பரம் செய்து பொய் வியாபாரம் செய்வார்கள். பலூன் ஊதி குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவார்கள். அதுபோலத்தான் இன்று தேர்தல் என்றவுடன், தமிழ்நாட்டில் புதிய கடைகளை விரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திருவிழா முடிந்தவுடன் அந்தக் கடைகள் எல்லாம் எப்படி மறைந்துவிடுமோ, அதேபோலத் தேர்தல் முடிந்ததும் அந்தப் புதிய கடைகள் அனைத்தும் காலி ஆகிவிடும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்றென்றும் மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கும்” என்றார்.

Read Entire Article