பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

19 hours ago 3

Last Updated:October 13, 2025 12:39 PM IST

School Holiday Announcement: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பக்தர்கள் நலனுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றன.

சூரசம்ஹாரம்

இவ்விடுமுறை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றிற்கு பொருந்தும். ஆனால் மருத்துவம், காவல்துறை, மின்சாரம், குடிநீர், தீயணைப்பு, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தாது எனவும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

சூரசம்ஹாரம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்நாளில் திருச்செந்தூர் முருகன் சுவாமி தரிசனத்திற்காக வருகை தருவர். பக்தர்கள் நெரிசல், போக்குவரத்து நெருக்கடி, மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளின் சிறப்பான நடைபெறுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அக்டோபர் 27ஆம் தேதி (திங்கள்கிழமை) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார்.

சூரசம்ஹாரம்

இந்த விழா 6 நாள் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான நிகழ்ச்சியான “சூரசம்ஹாரம்” அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத் திருவிழா ஆண்டுதோறும் தென் தமிழகத்தின் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் சிறப்பாகத் தொடங்குகிறது.

Read Entire Article