பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

3 hours ago 9

91640d84-d34b-4f9e-acc4-d13f3b708a00

மம்தா பானர்ஜி. - படம்: நியூஸ் ஆன் ஏர்

Opposition parties should unite against BJP: Mamata Banerjee's call

West Bengal's former Chief Minister Mamata Banerjee called for all opposition parties, including the Left, national parties, student organizations, and voluntary service organizations, to unite against the BJP. Speaking in Kolkatta, she declared BJP her primary enemy, urging unity without considering 'the enemy of my enemy is my friend'. She mentioned discussions with leaders like Kharge, Sonia, Rahul, Hemant Soren, Kejriwal, Uddhav Thackeray, Tejashwi Yadav, and Akhilesh Yadav, reaffirming her commitment to fight BJP at state and national levels.

Generated by AI

கோல்கத்தா: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

கோல்கத்தாவில் ரவீந்​திர​நாத் தாகூரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் பேசி​ய அவர், பாஜக​வுக்கு எதி​ராக இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஓரணி​யில் திரள வேண்​டும் என்றார்.

அனைத்து தேசிய கட்​சிகளும் பாஜக​வுக்கு எதி​ராக ஒன்​றிணைய வேண்​டும் என்றும் இதுதொடர்​பாக அரசி​யல் கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்த தாம் தயா​ராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனக்கு முதல் எதிரி என்றால் அது பாஜகதான் என்றும் இந்த நேரத்​தில் எதிரிக்கு எதிரி நண்​பன் என்ற கண்​ணோட்​டத்​தில் சிந்​திக்​கக்​கூ​டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்​கட்​சிகள் மட்​டுமன்றி மாணவர் அமைப்​பு​கள், தன்​னார்வத் தொண்டு அமைப்​பு​களும் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டியது அவசி​யம் என்றார் மம்தா.

“காங்​கிரஸ் தலை​வர்கள் கார்​கே, சோனியா, ராகுல், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வால் உள்​ளிட்​டோர் என்​னிடம் பேசினர். உத்​தவ் தாக்​கரே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தகவல்​களை அனுப்பி உள்​ளனர். அகிலேஷ் யாதவ் நேரில் வந்து ஆதரவை தெரி​வித்​தார்.

“மாநில, தேசிய அளவில் பாஜக​வுக்கு எதி​ராக தொடர்ந்​து போ​ராடு​வேன்​,” என்று முன்னாள் முதல்வரான மம்​தா பானர்​ஜி தெரி​வித்​தார்​.

Read Entire Article