
கொச்சி: ஜூன் 18-
அமலாக்கத் துறை அனுப்பிய புதிய சம்மனை தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்துக்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறுவனம் (சிஎம்ஆர்எல்) எந்தவொரு சேவையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஜூன் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி, விசாரணை தேதியை தள்ளி வைக்க வேண்டும் என வீணா கோரியிருந்தார். இதையடுத்து ஜூன் 17-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியது.
இதை ஏற்றுக்கொண்டு கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வீணா விஜயன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அப்போது செயல்படாமல் இருக்கும் அவரது ஐ.டி. நிறுவனம் தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சிஎம்ஆர்எல் நிறுவனர் சசிதரன் கர்த்தாவின் மனைவி மற்றும் மகனிடம் அமலாக்கத் துறை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது. இதற்கு முன்னதாக, சசிதரன் கர்த்தாவின் மகளிடமும் இந்த விவகாரம் குறித்து திங்கட்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.
.png)
1 hour ago
4







English (US) ·