நடப்பு அரசின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும். - கோப்புப் படம்: தினத்தந்தி
சென்னை: தமிழக அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) பிப்ரவரி 17ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடர், வரும் 17ஆம் தேதி தொடங்கும் என்றும் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
2026-27 நிதி ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை, கூடுதல் செலவு மானியக் கோரிக்கை ஆகியன இம்மாதம் 20ஆம் தேதி வாசிக்கப்படும் என்றார் அவர்.
சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருப்பதால், இது கடைசிக் கூட்டத் தொடர் ஆகும்.
எனவே, மக்களைக் கவரும் விதத்தில் புதிய அறிவிப்புகள் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படலாம் என்றும் பல்வேறு ஊகச்செய்திகள் பரவி வருகின்றன.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
.png)







English (US) ·