புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் — தி.மு.க. கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு

3 hours ago 9

புதுவை மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் — தி.மு.க. கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்டை மாநிலமான புதுச்சேரியில், மாநில சட்டமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியே நடைபெறவிருக்கும் நிலையில்,

கொல்லைப்புற வழியாக

அங்கே ஏற்கெனவே கட்சித் தாவல்மூலமும்,  கொல்லைப்புற வழியாக மூன்று உறுப்பினர்களை ஒன்றிய அரசால் நியமனம் என்ற முறையில், பா.ஜ.க. தனது வழக்கமான வித்தைகளைக் கையாண்டு, என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சி யின் தலைவர் திரு.ரங்கசாமி அவர்களை முதலமைச்சராக்கி, துணை நிலை ஆளுநர்மூலம் டில்லி அதிகார ஆட்சியை ஆர்.எஸ்.எஸ். — பா.ஜ.க. செய்து வந்த நிலையில், அய்ந்து ஆண்டு களை எப்படியோ ஓட்டி முடித்து, மீண்டும் அதே கூட்டணி — அ.தி.மு.க.வுக்கு இரண்டு இடங்கள் என ஒதுக்கி, ஆட்சியைப் பிடிக்கக் களம் காணுகிறது!

திராவிடர் கழகம் முடிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வைத்தியலிங்கம் எம்.பி., (புதுவை மாநில காங்கிரஸ்)
திரு.ஜெகத்ரட்சகன் எம்.பி., திரு.திருச்சி சிவா
எம்.பி. போன்றவர்கள் தலைமையில் திமு.க., வி.சி.க. உள்பட கூட்டணியினர், என்.ஆர்.காங்கிரஸ் — பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்துக் களம் காணும் நிலையில், காங்கிரஸ் — தி.மு.க. கூட்டணியை ஆதரித்து, அக்கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற உதவிட வேண்டும் என்று திராவிடர் கழகம் முடிவெடுத்து, புதுவை மாநில திராவிடர் கழகத்திற்கு அறிவுறுத்துகிறது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற உதவிடுவீர், உழைப்பீர்!

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  

5.4.2026     

Read Entire Article