பூன் லே பகுதியில் திடீர் வெள்ள எச்சரிக்கை, அங்குச் செல்வதைத் தவிர்க்கவும்: பியுபி

41 minutes ago 16

bfdc6088-ad3d-40fa-ae8d-09cf298e6a23

மே மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களில், சிங்கப்பூரின் பல பகுதிகளில் மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Flash flood warning in Boon Lay area, avoid going there: PUB

The Public Utilities Board (PUB) advised motorists to avoid Jurong West and Boon Lay on Saturday, May 16, due to torrential rain and flash flood risk. As of 9:50 AM, people were urged to avoid Boon Lay (from International Road to Enterprise Road) for several hours. The Meteorological Service predicts short-duration thunderstorms for Singapore's afternoons throughout May, with wind-borne rain from Indonesia's Sumatra island also expected.

Generated by AI

பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) சனிக்கிழமை (மே 16) காலை பெய்த கனமழையால் ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஓர் இடத்தைத் தவிர்க்கும்படி வாகனவோட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜாலான் பூன்லேயில் (இன்டர்நேஷனல் ரோடு முதல் என்டர்பிரைஸ் ரோடு வரை) திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த சில மணி நேரத்துக்கு அப்பகுதிக்குச் செல்லவேண்டாம் என்று அது காலை 9.50 மணிக்குக் கூறியது.

இம்மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களில், மதிய வேளைகளில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் வீசும் பலத்த காற்று, சிங்கப்பூரில் சில நாள்களில், அதிகாலை வேளையிலும் காலைப் பொழுதிலும் இடியுடன் கூடிய மழையையும் பலத்த காற்றையும் கொண்டுவரக்கூடும்.

Read Entire Article