பெட்ரோல் எண்ணெய் பயன்பாடு: `இதுதான் தோல்வி அரசுக்கான அடையாளம்'- பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி!

1 hour ago 13

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில், ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Published:Just NowUpdated:Just Now

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் மக்கள் அதையே பயன்படுத்த வேண்டும், தேச நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் திருமணம் செய்வது, சுற்றுலா செல்வது போன்றவற்றை ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டும். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``நேற்று மோடி அவர்கள் பொதுமக்களிடம் சில தியாகங்களைக் கோரியிருக்கிறார் - தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்திடுங்கள், மெட்ரோவில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள். இவை வெறும் வேண்டுகோள்கள் அல்ல.

இந்த அரசின் தோல்விக்கான ஆதாரங்கள். 12 ஆண்டுகால ஆட்சியில், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்குக் கட்டளையிடும் நிலைக்கு நாட்டை அவர் தள்ளியிருக்கிறார். ஒவ்வொரு முறையும், தங்கள் மீதான பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிப்பதற்காக, ஒட்டுமொத்தப் பழியையும் மக்கள் மீதே சுமத்துகிறார்கள். நாட்டை வழிநடத்துவது என்பது, தன்னாட்சியை இழந்த (Compromised) ஒரு பிரதமரால் இனி இயலாத காரியம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Entire Article