Last Updated:May 10, 2026 11:46 AM IST
பெண்களின் பிறந்த மாதம் அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் ஆளுமை தன்மைகளை வெளிப்படுத்தும் என எண் கணித நம்பிக்கைகள் கூறுகின்றன. ஜனவரி முதல் டிசம்பர் வரை பிறந்த பெண்களின் தனித்துவமான குணாதிசயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எண் கணித நம்பிக்கைகளின்படி, ஒருவர் பிறந்த மாதம் அவர்களின் குணநலன்கள் மற்றும் ஆளுமை தன்மைகளை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களின் பிறந்த மாதத்தை வைத்து அவர்களின் இயல்பு, சிந்தனை முறை மற்றும் வாழ்க்கை அணுகுமுறையைப் பற்றிய சில அம்சங்களை அறியலாம் என நம்பப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாதத்திலும் பிறந்த பெண்களின் தனித்துவமான குணாதிசயங்கள் குறித்து இங்கு காணலாம்.
ஜனவரி : ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் அழகுடன் கூடிய அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். உயர்தரமான ஆடைகள் மற்றும் பொருட்களில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். ஆனால் சில நேரங்களில் அதே வேகத்தில் சலிப்பும் அடைவார்கள். தொழிலில் முன்னேற வேண்டும் என்ற தீவிர எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். பிப்ரவரி : பிப்ரவரி மாத பெண்கள் புத்திசாலித்தனமாகவும் சாமர்த்தியமாகவும் நடந்து கொள்வார்கள். கவர்ச்சியான குணம் இருந்தாலும் இயல்பில் சற்று வெகுளியானவர்களாக இருப்பார்கள். அன்பும் நட்பும் இவர்களுக்கு மிகவும் முக்கியம். சுதந்திரத்தை அதிகம் விரும்புவதால் அதில் தலையிடுபவர்களை விரும்பமாட்டார்கள்.
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் மென்மையான மனப்பான்மை கொண்டவர்கள். நேர்மை மற்றும் உண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ரகசியங்களை பாதுகாப்பதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். நம்பகத்தன்மை காரணமாக பலரின் நம்பிக்கையையும் பெறுவார்கள். ஏப்ரல் மாத பெண்கள் அமைதியான குணத்துடன் மகிழ்ச்சியாக பழகுவார்கள். இவர்களின் நகைச்சுவை உணர்வு பிறரை எளிதில் ஈர்க்கும். தன்னம்பிக்கை இவர்களின் மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் பிடிவாதம் அதிகமாக இருக்கும். மே மாதத்தில் பிறந்த பெண்கள் உறுதியான மனநிலையுடன் இருப்பார்கள். கோபமும் பிடிவாதமும் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். அதேசமயம் மற்றவர்களை எளிதில் கவரும் தன்மையும் இவர்களிடம் காணப்படும். ஜூன் மாத பெண்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். சுற்றுலா செல்லவும் புதிய இடங்களை காணவும் விரும்புவார்கள். கலை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.
ஜூலை மாத பெண்கள் அனைவருடனும் நல்லிணக்கமாக பழக விரும்புவார்கள். பிறரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். தவறு செய்தவர்களை மன்னிக்கும் மனப்பான்மை இருந்தாலும் அதை எளிதில் மறக்கமாட்டார்கள்.ஆகஸ்ட் மாத பெண்கள் துணிச்சலாக செயல்படுவார்கள். சவால்களை எதிர்கொள்ள தயங்கமாட்டார்கள். தன்னம்பிக்கையுடன் பேசும் இவர்களுக்கு இசை மீது அதிக ஆர்வம் இருக்கும்.
செப்டம்பர்: செப்டம்பர் மாத பெண்கள் சில நேரங்களில் அவசர முடிவுகள் எடுப்பார்கள். பின்னர் அதற்காக வருந்தவும் வாய்ப்பு உள்ளது. மன உறுதியும் தைரியமும் கொண்ட இவர்கள், பிறரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவார்கள். நினைவாற்றலும் சிறப்பாக இருக்கும்.அக்டோபர்: அக்டோபர் மாத பெண்கள் அதிகமாக உரையாட விரும்புவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிறர் பேசும் கடினமான வார்த்தைகளை மனதில் வைத்துக் கொள்வார்கள். அறிவாற்றலில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
நவம்பர்ந: வம்பர் மாத பெண்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை எளிதில் பகிரமாட்டார்கள். ரகசியங்களை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். எந்த வேலையையும் துல்லியமாக செய்ய விரும்புவார்கள். தனித்துவமான வாழ்க்கை முறையால் பிறரின் கவனத்தை ஈர்ப்பார்கள்.டிசம்பர்: டிசம்பர் மாத பெண்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும் உயர்ந்த இலக்குகளுடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். அன்பாக பேசும் இயல்பு இவர்களிடம் இருக்கும். எதிர்காலத்தை முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவார்கள். ஆனால் இவர்களின் மனதை முழுமையாக புரிந்து கொள்வது சற்று கடினம் என கூறப்படுகிறது. குறிப்பு: மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் பரவி வரும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)






English (US) ·