போதைப்பொருள் சோதனையில் 99 பேர் கைது

22 hours ago 16

b593cf6c-7879-42c6-9324-7287881cf4a2

தீவு முழுவது நடத்தப்பட்ட சிஎன்பி விசாரணையில் சந்தேகத்திற்குரிய போதைப் பொருள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் (சிஎன்பி) $38,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 2 முதல் 6 வரை தீவெங்கும் நடந்த போதைப்பொருள் சோதனையில் 99 பேர் கைதாயினர்.

கிட்டத்தட்ட 210 கிராம் கஞ்சா, 146 கிராம் போதைமிகு அபின், 80 கிராம் ‘ஐஸ்’, 7 கிராம் கெட்டமைன், 100 டப்பென்டடோல் (Tapentadol) மாத்திரைகள், 11 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள், 75 மின்சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களையும், ஏறத்தாழ $7,075.35 வெள்ளி ரொக்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

அங் மோ கியோ, சுவா சூ காங், ஜூரோங், மரின் பரேட், மார்சிலிங், செம்பவாங் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பில் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிப்ரவரி 3ல், தெங்கா வட்டாரத்திலுள்ள வீடு ஒன்றில் சிஎன்பி அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து 31 வயது ஆடவர் ஒருவரும் 24 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

மத்திய போதைப்பொருள் பிரிவில் சுவா சூ காங்கில் குடியிருப்பு வீடு ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 26 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார். 

கிட்டத்தட்ட 123 கிராம் கஞ்சா, ஆறு கிராம் கெட்டமைன், போதைப்பொருளை உட்கொள்வதற்கான துணைக்கருவிகள் ஆகியவை அந்த ஆடவரின் படுக்கையறையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 5ல் சிஎன்பி அதிகாரிகள் மார்சிலிங் வட்டாரத்தில் தொடர்ச்சியாகச் சோதனை மேற்கொண்டனர். போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின்பேரில் அவர்கள், 63 வயது ஆடவர் ஒருவரைக் கைது செய்தனர்.

போதைப்பொருள் புழங்கியதாக அவர் சந்தேகிக்கப்படுகிறார் .போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 65 வயது ஒருவர் கைது செய்யப்பட்டார்..

கைது செய்யப்பட்ட இருவரும் சிங்கப்பூரர்கள்.

இந்த இரண்டு இடங்களிலுமே சோதனைகள் நடத்தப்பட்டதில், சிறிதளவு போதைமிகு அபினும் போதைப்பொருள் கருவிகளும் 65 வயது ஆடவரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மார்சிலிங் ரோட்டில் பிப்ரவரி 5ல் நடைபெற்ற ஒரே நேர, தொடர் விசாரணையில் வீடு ஒன்றுக்குள் போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின்பேரில் 52 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு வீட்டில் 60 வயது ஆடவர் ஒருவரும் 69 வயது ஆடவரும் முறையே போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் புழக்கம் ஆகிய குற்றங்களை இழைத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது வீட்டில், கிட்டத்தட்ட 15 கிராம் போதைமிகு அபின், 12 கிராம் ‘ஐஸ்’, $6,626.60 வெள்ளி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை தொடர்கிறது.

Read Entire Article