போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்

17 hours ago 13

காசா,  அக்.13-  கடந்த 2023ஆம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இருதரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. கடந்த 9-ம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இஸ்​ரேல் அமைச்​
சரவை ஒப்​புதல் அளித்த பிறகு கடந்த
10ஆம் தேதி காசா​வில் போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது.

அமைதி ஒப்​பந்​தத்​தின்​படி ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேலிய பிணைக்கை​தி​கள் 72 மணி நேரத்​தில் விடுக்​கப்பட வேண்​டும்.

இந்த சூழலில் அமெ ரிக்​கா, எகிப்​து, கத்​தார், துருக்​கி, அய்க்​கிய அரபு அமீரகம் ஆகிய நாடு​களை சேர்ந்த ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை கண்​காணிக்க உள்​ளனர்.

இதன்​படி அமெரிக்​கா​வின் சார்​பில் 200 வீரர்​கள் காசாவுக்கு அனுப்​பப்பட உள்​ளனர்.

அமெரிக்க ராணுவத்​தின் முதல் குழு நேற்று இஸ்​ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்​தது. அங்​கிருந்து அவர்​கள் காசா எல்​லைப் பகு​திக்கு சென்​றனர்.

இந்த வார இறு​திக்​குள் 200 அமெரிக்க வீரர்​கள் இஸ்​ரேலுக்கு வரு​வார்​கள் என்று எதிர்​பார்க்கப்படு கிறது. அவர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை முழு​மை​யாக கண்​காணிக்க உள்​ளனர்.

Read Entire Article