Last Updated:October 13, 2025 11:43 AM IST
ராமேஸ்வரம் தீவில் உள்ள மீனவர்களுக்கு பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்யோஜனா திட்டத்தின் பதிவு செய்ய சிறப்பு முகாம், இன்று முதல் (அக்டோபர் 13-ம் தேதி) ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

ராமேஸ்வரம் தீவில் உள்ள மீனவர்களுக்கு பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ் யோஜனா திட்டத்தின் பதிவு செய்ய சிறப்பு முகாம் அக்டோபர் 13-ம் தேதி முதல் ஒவ்வொரு கிராமங்களிலும் தனித்தனியாக நடைபெறுகிறது.
பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ் யோஜனா திட்டம் என்பது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையை முறைப்படுத்தி, குறு மற்றும் சிறு மீன்வளத் தொழிலையும், தொழில் நிறுவனங்களை ஆதரவளிப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த பிரதானட மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்யோஜனா (PM-MKSSY) NFDP Portal திட்டத்தில் பதிவு செய்யாத மீனவர்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமானது ராமேஸ்வரம் தீவில் உள்ள மீனவ கிராமங்களில் நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தில் பதிவு செய்வதுன் மூலம் மத்திய அரசு சார்பில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரண உதவிகள், மானியங்களும் கிடைக்கும். இதில் கலந்து கொள்ள அசல் ஆதார் அட்டை மற்றும் உங்களுடைய மொபைல் எண் இரண்டு மட்டும் போதுமானது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடம்/ தேதி விவரம்;- அக்டோபர் 13 - ராமகிருஷ்ணபுரம், அக்டோபர் 14 - அக்காள்மடம், நடராஜபுரம், அக்டோபர் 15 - பாம்பன், சேரான்கோட்டை, அக்டோபர் 16 - ராமேஸ்வரம், அக்டோபர் 22 - தெற்குவாடி, அக்டோபர் 25 - ஓலைக்குடா, சின்னப்பாலம், அக்டோபர் 27 - கரையூர், அக்டோபர் 28, தங்கச்சிமடம், மாங்காடு, அக்டோபர் 29 - சூசையப்பர் பட்டிணம், மாங்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

மீனவர்களே அலர்ட்... பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ் யோஜனா திட்டத்தில் இணைய சூப்பர் வாய்ப்பு !
மீனவர்களுக்கு PM-MKSSY திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் அக்டோபர் 13 முதல் நடைபெறுகிறது.
மீனவர்களுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகள், மானியங்கள் கிடைக்கும்.
அசல் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் கொண்டு முகாமில் பதிவு செய்யலாம்.