திருச்சி மாவட்டம், முசிறியில் நாமக்கல் முதல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலை மையத்தில் அரசு மருத்துவமனை சாலையோரம் அமைந்துள்ளது, திருச்சி செல்லும் நெடுஞ்சாலைகள் குறுகளாக உள்ளதால் அதிக அளவு ஏற்படும் விபத்துக்களில் சிகிச்சை பெற முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவார்கள், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் தங்கும் வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்,

முசிறி அரசு மருத்துவமனைக்கு அதிக மருத்துவர்கள், புதிய கட்டிடம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான இட வசதிகள் அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,
முசிறி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விக்னேஷ் முசிறி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், பதவியேற்று தொகுதிக்கு வந்த முதல் நாளே அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டது பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

முசிறி தொகுதி எம்எல்ஏ விக்னேஷ் ஆய்வில் முசிறி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், நோயாளிகள் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் இருப்பதாகவும், மருத்துவமனைகளில் இடிந்து விழும் நிலையிலும் மேற்கூரைகள் விழுந்தும் சில பகுதிகள் காணப்படுவதாகவும் எம்எல்ஏ குற்றச்சாட்டு,,
கடந்த ஆட்சியில் இது போன்ற அவல நிலை செயல்பட்டு வந்துள்ளது, தமிழக வெற்றி கழக ஆட்சியில் அனைத்தும் சரி செய்யப்படும் என எம்எல்ஏ தகவல்.
உடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருந்தனர்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
.png)








English (US) ·