மே 20-க்கு பிறகு விருச்சிக ராசியினருக்கு மெகா ஜாக்பாட்! பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம்!

1 hour ago 12

Astrology: 2026 மே மாத கிரகப் பெயர்ச்சிகளால் விருச்சிக ராசிக்கு பொற்காலம் பிறக்கிறது. எதிர்பாராத பணவரவு, அரசு வேலை, சொத்து சேர்க்கை எனப் பல யோகங்கள் உண்டாகும். இருப்பினும், குடும்ப வாழ்வில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மகிழ்ச்சி.

2 Min read

Published : May 09 2026, 12:17 PM IST

16

விருச்சிக ராசி

Image Credit : Asianet News

விருச்சிக ராசி

மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். இந்நிலையில் 2026 மே மாதத்தில் வானில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் சிறப்பான சஞ்சாரத்தால், உங்கள் வாழ்வில் நிலவி வந்த தடைகள் யாவும் விலகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

26

கொட்டப்போகும் பணமழை

Image Credit : Asianet News

கொட்டப்போகும் பணமழை

இந்த மாதம் பணவரவு என்பது நீங்கள் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து வரும். பணம் எங்கிருந்து வருகிறது? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு திடீர் அதிர்ஷ்டங்களும், பண வரவுகளும் உண்டாகும். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். காப்பீடு (Insurance) மற்றும் பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி சேமிப்புகள் உயரும்.

36

அரசு வேலை மற்றும் கல்வி

Image Credit : AI Meta

அரசு வேலை மற்றும் கல்வி

உத்தியோகத் துறையில் பெரிய முன்னேற்றம் காத்திருக்கிறது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. குறிப்பாக கருவூலத் துறை மருத்துவத் துறை (காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம்) சார்ந்தவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். மின்னணு சாதனங்களான லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை மாற்றும் யோகம் உண்டாகும்.

46

சொத்து மற்றும் வாகன யோகம்

Image Credit : Asianet News

சொத்து மற்றும் வாகன யோகம்

விருச்சிக ராசியினருக்குப் புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு, நவீன வசதிகள் கொண்ட புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

56

குடும்ப வாழ்க்கை - கவனமாக இருக்க வேண்டியவை

Image Credit : Gemini AI

குடும்ப வாழ்க்கை - கவனமாக இருக்க வேண்டியவை

பொருளாதார ரீதியாக வெற்றி கிடைத்தாலும், குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படலாம். "நான் சொல்வதுதான் சரி" என்ற பிடிவாதத்தால் கணவன்-மனைவி இடையே சிறு விவாதங்கள் எழலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்தால் தற்காலிகப் பிரிவைத் தடுத்து, சந்தோஷத்தை நிலைநாட்டலாம். வாழ்க்கைத் துணையின் பெயரில் உள்ள சொத்துக்கள் அல்லது அவர்கள் மூலமாக ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

66

மே 20-க்குப் பிறகு மகா யோகம்

Image Credit : Gemini AI

மே 20-க்குப் பிறகு மகா யோகம்

மே மாதத்தின் பிற்பாதி, அதாவது மே 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையே மாறப்போகிறது. நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்; பெரிய கோயில்களின் கும்பாபிஷேகம் போன்ற சுப காரியங்களுக்குத் தலைமை தாங்கும் கௌரவம் தேடி வரும். 90% மகிழ்ச்சியும், 100% பொருளாதார வளர்ச்சியும் பெறுவது உறுதி.

அதிர்ஷ்டம் பெருக எளிய பரிகாரம்

இந்த மாதம் முழுவதும் மயிலாப்பூர் கபாலீஸ்வரரை மனதார வழிபட்டு வாருங்கள். இறைவனின் அருளால் உங்கள் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும்.

Read Entire Article