Last Updated:Feb 22, 2026 7:54 PM IST
"யாரைக் கண்டும் நடுங்கிய வரலாறு அதிமுகவிற்கு கிடையாது. ஸ்டாலினுக்குத்தான் தோல்வி பயம் வந்துவிட்டது" என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மாதவரம் தொகுதி, பாடியநல்லூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பரப்புரையை மேற்கொண்டார்.
இதில் அவர் பேசியதாவது; “பாஜகவைக் கண்டு அதிமுக நடுங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். யாரைக் கண்டும் நடுங்கிய வரலாறு அதிமுகவிற்கு கிடையாது. ஸ்டாலினுக்குத்தான் தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக மட்டுமே. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்தக் கடனை மக்கள்தான் கட்டியாக வேண்டும்.
100 நாள் வேலை திட்டம், காஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவர்கள் கல்வி கடன் ரத்து என எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக கூட்டணி அதிக இடங்களை வென்று, தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும்.
வெளியில் வீராப்பாக பேசிவிட்டு, உள்ளே ரெய்டு பயத்துடன் இருப்பது திமுக. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது. மாநிலத்தில் காவல்துறை இருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது” என பேசினார்.
தொடர்ந்து, “அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப அட்டை தலைவிக்கும் மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். நகரப் பேருந்தில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம், ஏழை அனைவருக்கும் வீடுகள், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்துவோம், ஐந்து லட்சம் பேருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம், மாணவர்களின் கல்விக் கடனை அரசு செலுத்தும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் வழங்கினார்.
.png)






English (US) ·