Last Updated:Jun 13, 2026 5:18 PM IST
நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், பெங்களூரு - தன்பாத் சங்கமித்ரா விரைவு ரயில் உட்பட சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட உள்ளதாகவும், சில ரயில்கள்ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 25 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் வளாகம் - திருத்தணி மற்றும் அரக்கோணம் - வேலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி - சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், இந்த ரயில்கள் திருத்தணியுடன் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - சென்னை சென்ட்ரல், கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல். ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் காட்பாடி - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் சிஎஸ்எம்டி விரைவு ரயில் 75 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை - மங்களூரு விரைவு ரயில் 75 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை - கோவை விரைவு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், பெங்களூரு - தன்பாத் சங்கமித்ரா விரைவு ரயில் உட்பட சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட உள்ளதாகவும், சில ரயில்கள்ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என்றும் சென்னை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு ரயிலா? 3 வேளையும் இலவச உணவு!
சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 வேளையும் இலவச உணவு.
6 முக்கிய நிலையங்களில் சமூக சமையலறை மூலம் இலவச லங்கர் உணவு.
உணவு பருப்பு, சப்ஜி போன்ற சைவ வகைகளாக இருக்கும்.
.png)




English (US) ·