ரயில் பயணிகள் கவனத்திற்கு.... 3 ரயில்களின் சேவை பாதி ரத்து... எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா ?

12 hours ago 16

Last Updated:Feb 07, 2026 6:31 PM IST

ரயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடப்பதால் சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்களின் சேவை பாதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறை

கரூர் வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறை

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் (வண்டி எண்- 16844) பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் 10, 13-ந் தேதிகளில் கரூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மேலும் பணிகள் முடிந்த பிறகு அந்த ரயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

ரயில்வே துறை

அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் ரயில் (வண்டி எண்-16811) எக்ஸ்பிரஸ் 10, 13-ந் தேதிகளில் வீரராக்கியம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை

மேலும் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16812) 10, 13-ந் தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும். அந்த ரயில் சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை இயக்கப்படும்.

ரயில்வே துறை

எனவே, ரயில் சேவைகளின் பாதிப்புக்கு பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.... 3 ரயில்களின் சேவை பாதி ரத்து... எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா ?

ரயில் பயணிகள் கவனத்திற்கு.... 3 ரயில்களின் சேவை பாதி ரத்து... எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா ?

  • சேலம்-மயிலாடுதுறை, பாலக்காடு-திருச்சி உள்ளிட்ட 3 ரயில்கள் 3 நாட்கள் பாதி ரத்து செய்யப்பட்டுள்ளது

  • ரயில்வே பாலம் புனரமைப்பு காரணமாக, குறிப்பிட்ட வழித்தடங்களில் சேவை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

  • பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article