சில தினங்களில் சுக்கிர பகவான் சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இது சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், பொருளாதார முன்னேற்றத்தையும் தர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
2 Min read
Published : Feb 08 2026, 12:28 PM IST
16

Image Credit : Asianet News
சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் நட்சத்திரம் மாறும்போது அதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். பிப்ரவரி 11, 2026 காலை 8:56 மணிக்கு சுக்கிரன் சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
சதய நட்சத்திரம் கும்ப ராசியில் அமைந்திருப்பதாலும், இதன் அதிபதி ராகு என்பதாலும் சுக்கிரனின் இடமாற்றம் சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், பொருளாதார முன்னேற்றத்தையும் தரவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
26
Image Credit : Asianet News
மேஷம்
மேஷ ராசியின் பதினோராவது வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் மூலம் லாபம் உண்டாகும். சுக்கிரனின் பெயர்ச்சி தன்னம்பிக்கையையும் நிதி வலிமையையும் தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு சாதகமான நேரமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
36
Image Credit : Asianet News
ரிஷபம்
ரிஷப ராசியின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான புதிய வாகனங்கள் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
46
Image Credit : Asianet News
மிதுனம்
மிதுன ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழியிலிருந்து பூர்வீக சொத்துக்கள் அல்லது எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
56
Image Credit : Asianet News
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களை அளிக்கும். திருமணம் அல்லது உறவுகள் இனிமையாக மாறும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலையில் பாராட்டுக்களும், மரியாதையும் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். கலைத்துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும்.
66
Image Credit : Asianet News
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சியால் படைப்பாற்றல் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். புதிய தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். நீண்ட கால முதலீடுகளை செய்வதற்கு சாதகமான நேரமாகும். காதல் உறவுகள் வலுப்படும்.
.png)
1 hour ago
20







English (US) ·