Last Updated:Jul 24, 2026 5:48 PM IST
ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிப்பது எளிதல்ல என நடிகர் யஷ் பாராட்டியுள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணம்' தீபாவளிக்கு வெளியாகிறது.

“ராமர் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல..” என்று கூறி ரன்பீர் கபூரை நடிகர் யஷ் பாராட்டியுள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ராமாயணம்’. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உலக அளவில் படத்தை கொண்டு சேர்க்க உள்ளதால் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற காமிக்ஸ் கான் (Comic-Con 2026) நிகழ்வில் ரன்பீர் கபூர், யஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அப்போது பேசிய நடிகர் யஷ், “இந்த உலகத்தில் யாரும் தானாக முன்வந்து கடவுள் ராமராக நடிக்கும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் என்று சொல்லமாட்டார்கள். அப்படி ரன்பீர் கபூர் தானாக முன்வந்து சொன்னது அவருடைய ஒழுக்கத்தை காட்டுக்கிறது. ரன்பீர் ஒரு சிறப்பான நடிகர். ராமராக நடிப்பது அவ்வளவு எளிதல்ல. படத்துக்காக அவர் கடினமான உழைப்பை செலுத்தியுள்ளார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
.png)








English (US) ·