கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரிய மனுவை திரும்பப் பெற திமுகவினர் பேரம் பேசுவதாக நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14
Image Credit :
Asianet News
வீடியோ வெளியிட்ட மனுதாரர்
கடந்த மாதம் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தவெக, பாதிக்கப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனிடையே பிரபாகரன் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவரிடம் பொய்யாக கையெழுத்து பெற்று மனுதாக்கல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் பெயர் பிரபாகரன். கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில் நான், என் மகள், என் மாப்பிள்ளை என மூவரும் சென்றிருந்தோம். என்னுடன் வந்த இருவரும் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிப்பதற்காக நான் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என மனுத்தாக்கல் செய்தேன்.
24
Image Credit :
Asianet News
பேரம் பேசும் திமுக..
ஆனால் என்னை தொடர்பு கொண்ட திமுக ஒன்றிய செயலாளர் ரகுநாதன் வழக்கை வாபஸ் வாங்குங்கள். உங்களுக்கு ரூ.20 லட்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பேரம் பேசினார். நான் அவர்களிடம் பிறகு சொல்கிறேன் என்று கூறி அவர்களை மறுத்துவிட்டேன். இந்நிலையில் எனது பெயரில் போலியாக மனுதாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அது பொய். நான் சுயநினைவோடு தான் மனுத்தாக்கல் செய்தேன். இன்று இப்படி செய்தவர்கள் நாளை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தற்போது நானும், எனது தாயாரும் தான் இருக்கிறோம். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பிரபாகரனின் வீடியோவைப் பகிர்ந்த அதிமுக “#KarurTragedy தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள திரு. பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
34
Image Credit :
Asianet News
ஏன் பதறுகிறீர்கள்?
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார். அறிவாலயத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் பதறுகிறீர்கள்? என்ன தவறு செய்தீர்கள்?
#KarurTragedy தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள திரு. பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில்… pic.twitter.com/KVNGUsex3P
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) October 13, 2025
44
திமுக-வின் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை
வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்? நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?
திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது. வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.