புதுடெல்லி: பிப்ரவரி 7-
‘‘டிஜிட்​டல் மோசடிகளில் பணத்தை இழப்​பவர்​களுக்கு, வங்கி மூலம் ரூ.25,000 இழப்​பீடு வழங்​கப்​படும்’’ என்று ரிசர்வ் வங்கி கவர்​னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா அறி​வித்​துள்​ளார்.கடந்த 4-ம் தேதி தொடங்கி ரிசர்வ் வங்​கி​யின் நிதிக் கொள்கை குழுக் கூட்டம் மும்பை​யில் 3 நாட்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்​னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா மும்​பை​யில் நேற்று செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு நாடு முழு​வதும் நடை​பெற்ற டிஜிட்​டல் மோசடிகளில் சுமார் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த மோசடிகளால் சுமார் 21 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் நேரடி​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளனர்.கடந்த 2017-ம் ஆண்​டில் வெளி​யிடப்​பட்ட வழி​காட்டு நெறிகளின்​படி டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​களில் ஏற்​படும் இழப்​பு​களுக்கு வாடிக்​கை​யாளரே பொறுப்பு என்று கூறப்​பட்டுள்​ளது. இதன் ​காரண​மாக டிஜிட்​டல் மோசடிகளால் பாதிக்​கப்​படும் நபர்​களுக்கு இழப்​பீடு கிடைப்​பது இல்​லை. இந்தச் சூழலில் டிஜிட்​டல் மோசடிகளைத் தடுக்க விரை​வில் 3 வரைவுக் கொள்​கைகள் வெளி​யிடப்​படும். இதுதொடர்​பாக பொது​மக்​கள் மற்​றும் வங்கித் துறை சார்ந்த நிபுணர்​களின் கருத்​துகள் கேட்​டறியப்​படும்.முதல் வரைவு கொள்​கை​யில், டிஜிட்​டல் மோசடிகளால் பாதிக்​கப்​படும் நபர்​களுக்கு இழப்​பீடு கிடைக்க வழி​வகை செய்​யப்​படும். டிஜிட்​டல் மோசடிகளில் பணத்தை இழக்​கும் நபருக்கு சம்​பந்​தப்​பட்ட வங்கி நிர்​வாகம் சார்​பில் அதி​கபட்​ச​மாக ரூ.25,000 இழப்​பீடு வழங்​கப்​படும்.
முதியோர் பணம்: டிஜிட்​டல் மோசடிகளில் பெரும்​பாலும் மூத்த குடிமக்​களே அதி​கம் பாதிக்​கப்​படு​கின்​றனர். இதை தடுக்க முதி​யோர் மேற்​கொள்​ளும் டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களில் பணப் பரி​மாற்​றம் தாமத​மாக நடை​பெற நடவடிக்கை எடுக்​கப்​படும். இரண்​டாவது வரைவு கொள்​கை​யில், டிஜிட்​டல் மோசடிகளை தடுக்க கடுமை​யான விதி​முறை​கள் வரையறுக்​கப்​படும்.மூன்​றாவது வரைவு கொள்​கை​யில், வாடிக்​கை​யாளர்​களிடம் இருந்து கடனை நியாய​மான முறை​யில் வசூலிக்க விதி​கள் உரு​வாக்​கப்​படும். குறிப்​பாக 3-ம் தரப்பு மூலம் கடன் தொகையை வசூலிக்​கும் நடவடிக்கை ஒழுங்​குபடுத்​தப்​படும்.நகர்ப்​புற கூட்​டுறவு வங்​கி​களின் செயல்​பாடு​களை மேம்​படுத்த சஹகாரி வங்கி கஷம்தா நிர்​மான் என்ற திட்​டம் தொடங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தின்​படி 1.4 லட்​சம் கூட்​டுறவு வங்​கி​களின் ஊழியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும். குறிப்​பாக வங்கி நிர்​வாகம், தொழில்​நுட்​பம் சார்ந்து ஊழியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​கப்​படும்.இதன்​மூலம் நகர்ப்​புற கூட்​டுறவு வங்​கி​களின் செயல்​பாடு​கள் மேம்​படுத்​தப்​படும். கூட்​டுறவு வங்​கி​கள் வழங்​கும் தனி​நபர் கடன்​களின் வரம்பை அதி​கரிக்க பரிந்​துரை செய்​கிறோம். இவ்​வாறு ரிசர்வ் வங்கி கவர்​னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா தெரி​வித்​தார்.