Last Updated:October 13, 2025 12:19 PM IST
வருமானம் குறைந்தவிட்டதாகவும், அரசியலிலிருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கே திரும்ப இருப்பதாகவும் நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
வருமானம் குறைந்தவிட்டதாகவும், அரசியலிலிருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கே திரும்ப இருப்பதாகவும் நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா எம்.பியான சதானந்தன் மாஸ்டர் எம்.பி அலுவலக திறப்பு விழா கேரளாவின் கண்ணூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி பேசுகையில், “நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவே விரும்புகிறேன்.
நான் இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. என்னுடைய வருமானம் முழுமையாக குறைந்தவிட்டது. நான் மத்திய அமைச்சராக வேண்டும் என்று எப்போதும் விரும்பியதில்லை. தேர்தலுக்கு முன்பு கூட நான் அமைச்சராக விரும்பவில்லை என்றும், சினிமாவில் பயணத்தை தொடர விரும்புகிறேன் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினேன்.
பாஜகவில் நான் கடந்த 2008-ம் ஆண்டு சேர்ந்தேன். என்னை அமைச்சராக்க வேண்டும் என்பதால் முதல் எம்.பி.யாக என்னை மக்கள் தேர்ந்தெடுத்தனர். எனக்கு பதிலாக புதிய ராஜ்ய சபா எம்.பியான சதானந்தனை மத்திய அமைச்சராக ஆக்குங்கள். என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சதானந்தனை அமைச்சராக்கினால் அது கேரளாவில் புதிய அரசியல் சரித்திர நிகழ்வாக அமையும்” என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டு ராஜய்சபா உறுப்பினராக பாஜகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் சுரேஷ் கோபி. 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் இரண்டு தேர்தல்களிலும் தோல்வியை தழுவினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு சிபிஐ வேட்பாளர் சுனில் குமாரை விட 74 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 12:19 PM IST