Last Updated:May 10, 2026 12:56 PM IST
வானிலை மாற்றத்தால் மாவட்டம் முழுவதும் இதமான காலநிலை நிலவி வரும் நிலையில், அடுத்த சில நாட்களும் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News18
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, அதிகாலை நேரத்தில் மழையாக மாறியது. தொடர்ந்து பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
புதுக்கோட்டை நகரம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மற்றும் மிதமான மழை இடைவிடாமல் பெய்தது. சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக பயணம் செய்தனர். பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் குடைகளுடன் சென்ற காட்சியும் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பத்திலிருந்து மக்கள் இந்த மழையால் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், இந்த மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
May 10, 2026 12:56 PM IST
.png)






English (US) ·