வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

2 hours ago 12

கோவை, மே 10 கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சேது ரகுநாதன். இவரது மனைவி தையநாயகி (48). இவர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர் கூறியி ருப்பதாவது: நான் ரத்தினபுரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் சேது ரகுநாதன் சட்டமன்ற தேர்தலில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய தமிழர் ஜனநாயக கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்டார். மேலும், அவர் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளராக இருந்து வருகிறார்.

தேர்தல் பகுப்பாய்வு

நானும், மாலா என்பவரும் முன்பு பாஜ., மகளிர் அணியில் செயல்பட்டு வந்தோம். அந்த நேரத்தில் எங்களது ஒளிப்படம் சமூக வலைதளமான ‘முகநூல்’ பக்கத்தில் வெளியானது. அதற்கு நான் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தேன். இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் வீர தமிழச்சி என்றழைக்கப்படும் சரஸ்வதி என்பவர் நான் வெளி யிட்ட சமூக வலைதள பதிவை காரணம் காட்டி அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சரஸ்வதி என்னிடம் கைப்பேசியில் பேசினார். அப்போது எனது கணவர் கைப்பேசியை வாங்கி பேசினார். அதற்கு சரஸ்வதி, ‘‘பெண்கள் பேசும்போது ஏன் இடையில் பேசுகிறாய்?, நீ எங்கு இருக்கிறாய்?, உன் முகவரியை கூறு, நேரில் வந்து பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளோம்.

நாங்கள் பாஜ.,வில் இருந்து விலகி, எனது கணவர் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டதன் காரணமாகவே இந்த மிரட்டல் விடுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது. எனவே, வீர தமிழச்சி என்ற சரஸ்வதி மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத் தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Read Entire Article