சென்னை: மே 13-
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சியின் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், தவெக-விற்கு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அரசுக்கான ஆதரவை பெற குதிரைபேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன் முகத்தை மூடி கொண்டு காரில் சென்றது யார் என்று கேள்வி எழுப்பி, அந்த நபர் குறித்து அவையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். குதிரை பேரம் நடந்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். பின்னர் அவையில் பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன், நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கிறோம் என்றார்.