Last Updated:Feb 22, 2026 7:39 PM IST
பாம்பு இனங்களை பொதுமைபடுத்தி விட முடியாது. ஒவ்வொரு வகை பாம்புகளும் பூவுவியல் ரீதியாகவும் வாழ்விடம் ரீதியாகவும் மாறுபட்டது

இந்தியாவில் 350க்கும் அதிகமான பாம்பு இனங்கள் உள்ளன. பாம்பு இனங்களை பொதுமைபடுத்தி விட முடியாது. ஒவ்வொரு வகை பாம்புகளும் பூவுவியல் ரீதியாகவும் வாழ்விடம் ரீதியாகவும் மாறுபட்டது. சமீபத்தில், பெண் ராஜநாகத்தின் அசாதாரண நடத்தை பற்றிய ஆய்வுகள் வெளியாகியன. இந்த ஆய்வுகள் பாம்புகள் பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்வதாக அமைந்ததுள்ளது.
உலகின் நீளமான விஷப்பாம்பான ராஜ நாகங்கள் ஆசிய கண்டத்தில் மட்டுமே வசிக்கின்றன. ஊர்வன விலங்குகளிலேயே மிகவும் புத்திசாலியானதாகும். பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் இவை, நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. பாம்புகள் பறவைகளைப் போலவே தனக்கென சுயமாகக் கூடு கட்டும் பழக்கமில்லாதவை. பொதுவாக, விலங்குகள் கைவிட்ட பொந்துகளிலோ அல்லது நிலத்தடி குழிகளிலோ முட்டையிடும் வழக்கம் கொண்டவை. ஆனால், பெண் ராஜநாகம் தனது இனப்பெருக்க காலத்தில் மேற்கொள்ளும் ஒரு தனித்துவமான நடைமுறை இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலகிலேயே,தன் முட்டைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சுயமாக கூடு கட்டும் ஒரே பாம்பு இனம் ராஜநாகம் என்பதையே விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர்
ராஜநாகங்கள் பெரும்பாலும் பெரிய மரங்களின் அடிப்பகுதி அல்லது மூங்கில் காடுகளின் அடர்ந்த பகுதிகளில் கூடு அமைக்கப்படுகிறது. இவ்விடங்களில் நிழலும், இயற்கை பாதுகாப்பும் சமநிலையாக இருக்கும். புகழ்பெற்ற ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேக்கர் குறிப்பிடுவது போல, பெண் ராஜநாகங்கள் தகுந்த இடத்தைத் தேர்வு செய்யப் பல நாட்கள் ஆய்வு செய்து, நீர் தேங்காத மூங்கில் காடுகள் அல்லது பெரிய மரத்தடிகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களின் கட்டுமானத்தைத் தொடங்குகின்றன. சுமார் 1.4 மீட்டர் அகலமும் 55 செ.மீ உயரமும் கொண்ட இந்த அமைப்பை (கூட்டை) உருவாக்க, ராஜநாகம் தன் உடலையே கருவியாகப் பயன்படுத்துகிறது. இது காட்டில் சிதறிக் கிடக்கும் காய்ந்த இலைகளை ஒன்றாகத் திரட்டி, தன் உடல் எடையால் மீண்டும் மீண்டும் அழுத்தி, மழையிலும் நனையாத ஒரு நீர்ப்புகா (Waterproof) மேடாக மாற்றுகிறது.
பெண் பாம்பு தனது உடலை வளைக்கவும் தள்ளவும் செய்து நூற்றுக்கணக்கான இலைகளை ஒன்று ஒன்று சேர்த்து குவிக்கிறது. பின்னர் அவற்றை மீண்டும் மீண்டும் அழுத்தி உறுதியான, நீர்ப்புகா மேடு போல மாற்றுகிறது. அதன் நடுவில் கிண்ணம் போன்ற பள்ளம் உருவாக்கப்படுகிறது. அதன்பின் 15 முதல் 50 வரை முட்டைகள் இடப்படுகின்றன.
முட்டைகள் வெளிவரவ 75 முதல் 100 நாட்கள் ஆகும். இந்த காலம் முழுவதும் பெண் கிங் கோப்ரா கூடின் அருகில் தங்கி பாதுகாப்பாக கண்காணிக்கிறது. அதன் இருப்பு சிறிய பாலூட்டிகள், உடும்புகள் மற்றும் பிற பாம்புகள் போன்ற எதிரிகளை தடுக்கிறது. முட்டைகளை நேரடியாக சூடாக்கவில்லை என்றாலும், பாதுகாப்பு முயற்சி அவற்றின் உயிர்வாழ்வை அதிகரிக்கிறது.
நன்றாக கட்டப்பட்ட கூடுகள் சிறிய மழையையும் தாங்கி பல வாரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த தனித்துவமான நடத்தை ஏன் உருவானது என்பதை பற்றி விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். காடுகளின் தட்பவெப்பநிலை மாற்றங்களிலிருந்து முட்டைகளைப் பாதுகாப்பதற்கும், இலைகள் உருவாக்கும் வெப்பம் (Incubation heat) முட்டைகள் பொரிவதற்குத் தேவையான சூழலை வழங்குவதற்கும் இந்த கூடு கட்டும் முறை உதவலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. பெண் ராஜ நாகங்களின் இந்த முயற்சி அதன் தலைமுறையின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

“அமெரிக்காவின் அழுத்ததிற்கு ஈரான் அடிபணியாது..” அதிபர் மசூத்
ஈரான் மீது அமெரிக்கா அழுத்தம் அதிகரித்தாலும், அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அடிபணியாது என கூறினார்.
அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தும், அமெரிக்கா-ஈரான் இடையே உடன்பாடு எட்டவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்கா படை குவிப்பு அதிகரிக்க, ஈரான் மீது தாக்குதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
.png)






English (US) ·