‘வீர ராஜா வீரா’ பாடல்: உச்ச நீதிமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த உறுதி!

1 hour ago 18

Last Updated:Feb 21, 2026 9:49 PM IST

தனது முன்னோர்கள் ஜூனியர் தாகர் சகோதரர்கள் உருவாக்கிய இசையை அனுமதி இன்றி ஏஆர் ரஹ்மான் பயன்படுத்தியதாக இந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதின் தாகர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட உடன்பாடு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

தனது முன்னோர்கள் ஜூனியர் தாகர் சகோதரர்கள் உருவாக்கிய இசையை அனுமதி இன்றி ஏஆர் ரஹ்மான் பயன்படுத்தியதாக இந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதின் தாகர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில், வீர ராஜா வீரா பாடலில் ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு அங்கீகாரம் வழங்க ஏஆர் ரகுமான் தரப்பு ஒப்புக்கொண்டது.

இது குறித்து விளக்கம் தந்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்ற நோக்கில் தாமாக முன்வந்துதான் அங்கீகாரம் வழங்க ஒப்புக்கொண்டதாக ஏஆர் ரஹ்மான் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த இசைக் கோர்வையின் உண்மைத்தன்மை மற்றும் அதன் மீதான காப்புரிமை உரிமை யாருக்கு என்பது குறித்த கேள்விகளுக்கு இன்னும் சட்டப்பூர்வமான விடை கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நீதிமன்றத்தின் மூலமே இறுதித் தீர்வு காணப்படும் என ஏஆர் ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read Entire Article