தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Published:4 mins agoUpdated:4 mins ago

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் இன்று பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதுடன், 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஷால், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததோடு சில கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், " நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். அவரை எப்போதுமே தளபதி என்று அழைக்கத்தான் எனக்குப் பிடிக்கும்.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் பதவியேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. நம் திரையுலகைச் சார்ந்த ஒரு ஆளுமை மாநிலத்தை வழிநடத்துவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். இது நம் மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும். அன்புள்ள முதல்வர் விஜய் சார், கடந்த 32 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த ஒரு நபரை, இன்று 'சார்' என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.

விஷால் - விஜய்
ஒரு வாக்காளராக உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். முதலமைச்சர் தனது வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்குச் செல்லும்போது, வீணாக வெயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் கவனிப்பீர்கள் என நம்புகிறேன்.
அவர்களுக்கு மொபைல் டாய்லெட் வசதிகளை செய்து தர வேண்டுகிறேன். நிச்சயமாக நிறைவேற்ற வேண்டிய பல வாக்குறுதிகள் உள்ளன.
அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் சாலைகளின் நிலை, மழைநீர் தேங்குதல், இன்னும் பயன்பாட்டிற்கு வராத மழைநீர் வடிகால் வசதிகள் போன்ற அடிப்படைப் பிரச்னைகளைச் சரி செய்ய வேண்டும் என ஒரு சராசரி மனிதனாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத சில மாற்றங்களை நீங்கள் முன்னெடுத்தால், அது மிகப்பெரிய அடையாளமாக மாறும்." என்றிருக்கிறார்,
.png)






English (US) ·