Last Updated:Dec 21, 2025 1:06 PM IST
இந்தியாவில் அவதார் 3 திரைப்படம் 2 நாட்களில் சுமார் ரூ. 50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நேற்று முன்தினம் வெளியான ஹாலிவுட் படமான அவதார் 3 ஆம் பாகம் வரவேற்பை பெற்றபோதிலும், கடந்த 5 ஆம் தேதி வெளிவந்த துரந்தர் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
அவதார் 3 ஆம் பாகம் ரிலீஸ் ஆன பின்னர், ரன்வீர் சிங்கின் துரந்தர் இந்தி திரைப்படத்தின் வசூல் நன்றாக குறைந்து விடும் என பேசப்பட்ட நிலையில், வசூல் பாதிப்பின்றி இந்த படம் ரூ. 1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
துரந்தர் திரைப்படத்திற்கு முதல் சில நாட்களில் நல்ல வசூல் கிடைக்காத நிலையில், பாசிடிவான விமர்சனங்கள் காரணமாக வசூல் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்தது.
பாகிஸ்தானுக்குள் இந்திய உளவாளியாக புகும் ஹீரோ ரன்வீர் சிங் சதித்திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் விறுவிறுப்பான துரந்தர் படத்துடைய கதை.
இந்த படம் வெளியான 16 நாட்களில் மட்டும் 785 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ரூ. 1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பான் இந்தியா அளவில் அவதார் 3 திரைப்படம் வசூலை குவித்தாலும், அதனுடன் 2 வாரங்களுக்கு முன்பே ரிலீசான துரந்தர் திரைப்படம் போட்டி போட்டு வருவது இந்திய சினிமாவில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அவதார் 3 திரைப்படம் 2 நாட்களில் சுமார் ரூ. 50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026-ல் தங்கம், வெள்ளி விலை இதுதான்.. நிபுணர்கள் விளக்கம்!
2026ல் தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1.5-1.6 லட்சம் என கணிப்பு.
வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.2,03,000, அவுன்ஸ் ஒன்றுக்கு $70 வரை உயரலாம்.
.png)






English (US) ·