2009 நாடாளுமன்றத் தேர்தல் போலவே 2026 தேர்தலிலும்! விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்ட கதை

23 hours ago 10

Last Updated:Apr 05, 2026 8:00 PM IST

காங்கிரஸ் வேட்பாளர் பி விஸ்வநாதன் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதிலும், தற்போது தேர்வு செய்யப்பட்டதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

News18
News18

சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேர்வு செய்யப்பட்டதிலும், தற்போது தேர்வு செய்யப்பட்டதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், மேலூர் நீங்கலாக 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த காங்கிரஸ் கட்சி நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

யார் இந்த காங்கிரஸ் பி. விஸ்வநாதன்:

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராக இருந்த பி. விஸ்வநாதன், தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும் இருந்துவருகிறார். மேலும், தெலுங்கானா மாநில பொறுப்பாளராகவும் விஸ்வநாதன் இருக்கிறார்.

தேர்தலில் போட்டியிட தனக்கு பொதுத் தொகுதி வேண்டும் என விஸ்வநாதன் அண்மையில் கேட்டிருந்த நிலையில், தற்போது அவர் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2009-ல் நடந்தது என்ன?

2026 சட்டமன்றத் தேர்தல் போலவே 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், நீண்ட இழுபறிக்குப் பிறகே பி. விஸ்வநாதன் காஞ்சிபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

2009  நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தது. அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் போட்டியிட்டன.

இந்தத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு பி. விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்ட அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

Read Entire Article